Daily Horoscope
✕

ஒரே ஒரு டோஸ் போதும்; ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி! – அமெரிக்கா அனுமதி!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (09:05 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அங்கு பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு நடுவே இரண்டு டோஸ்களாக தடுப்பூசிகளை செலுத்த வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசரகால அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசி ஒரே டோஸில் கொரோனாவுக்கு எதிராக செயல்படுவதாகவும், மேலும் தடுப்பூசிகளை பாதுகாக்க குளிர்சாதன பெட்டி போன்ற எளிமையான முறைகளே போதும் என்பதாலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

இனி டேட்டா இல்லாமல் ரீசார்ஜ் செய்யலாம்!. புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்த ஏர்டெல்!...

கடன் வாங்குவதை குறைத்த தவெக அரசு!.. அரசியல் விமர்சகர்கள் பாராட்டு..

விஜய் நினைச்சா ஒரு நிமிஷம்தான்!.. முதல்வருக்கு லெஜண்ட் வைத்த கோரிக்கை...

தாராபுரத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!...

மதுராந்தகத்திற்கு புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர் விஜய்!...

அடுத்த கட்டுரையில்
Show comments