வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 பிப்ரவரி 2021 (10:51 IST)

விஜய் படத்தில் நான் கதாநாயகியா? பூஜா ஹெக்டே பதில்!

தளபதி 65 படத்தில் கதாநாயகியாக நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பூஜா ஹெக்டே பதிலளித்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாக வுள்ள தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாகக் கலக்கி வரும் பூஜா ஹெக்டேதான் விஜய்க்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது ‘விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இந்த படத்தின் மூலம் அது நிறைவேறினால் சந்தோஷம். விரைவில் விஜய்யுடன் நடிப்பேன் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.