புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (09:00 IST)

75,000 ஊழியர்களை நீக்குகிறதா யூனிலிவர் நிறுவனம்? காரணம் ஐஸ்க்ரீம் தான்..!

Hindustan Unilever
உணவு மற்றும் பானங்கள், சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் அழகுப் பொருட்கள் உற்பத்தி செய்து வரும் லண்டனை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் யூனிலிவர் என்ற நிறுவனம் 75 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கொரோனா வைரஸ் காலத்திற்குப் பின்னர் கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்ததால் ஏராளமானோர் வேலை இழந்தனர் என்பதும் இன்னும் கூட அவர்களில் பலருக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான யூனிலிவர் நிறுவனம் ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனையை கைவிட முடிவு செய்துள்ளதால் 75 ஆயிரம் பேர் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
செலவினங்களை குறைக்கும் வகையில் யூனிலிவர்  சில சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் இதன் காரணமாகவும் சில ஆயிரம் பேர் வேலைகளுக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
குறிப்பாக ஐஸ்கிரீம் உற்பத்தி மற்றும் விற்பனையை கைவிட யூனிலிவர்  நிறுவனம் முடிவு செய்துள்ளதால் 75 ஆயிரம் பேர் வேலை இழப்பார்கள் என்ற செய்தி அந்நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva