ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 10 மே 2023 (22:14 IST)

உக்ரைன் போரில் இதுவரை 10 பத்திரிக்கையாளர் உயிரிழப்பு

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா ராணுவம் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நிதி மற்றும் ஆயுத உதவியால் உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது.

இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டு 1 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள  நிலையில் இரு நாடுகள் தரப்பில் அதிக உயிர்பலிகள் ஏற்பட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  1945 ஆம் ஆண்டு 2 ஆம் உலகப்போரில் ஜெர்மனை ஆட்சி செய்த ஹிட்லரின் நாஜி படையை தோற்கடித்து வெற்றி பெற்ற தினம் ரஷியாவில்   நடைபெற்றது.
அப்போது, ரஷிய அதிபர் புதின் நாட்டு மக்களுக்கு  உரையாற்றினார்.

சமீபத்தில் புதினை கொல்ல உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதற்குப் பல மாதங்களுக்குப் பிறகு, உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பக்முத் நகரில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.

இத்தாக்குதலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோல்டின்(22) என்ற பத்திரிக்கையாளர்  உயிரிழந்தார். இப்போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 10 பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.