1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (13:20 IST)

தோண்ட தோண்ட பிணங்கள்; ரஷ்யாவின் இனப்படுகொலை அம்பலம்? – ஜெலன்ஸ்கி ஆவேசம்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் கீவ் பகுதியில் உக்ரைன் மக்களின் பிணங்கள் கிடைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் பல ஆயிரம் மக்கள் அகதிகளாக உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் கீவ் அருகே உள்ள புகா என்ற பகுதியில் கிட்டத்தட்ட 300 உக்ரைன் பொதுமக்கள் இறந்தநிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது இனப்படுகொலையை ரஷ்யா நடத்தி வருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவை குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.