வியாழன், 3 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (11:18 IST)

ஈரான் தாக்குதலில் பங்கேற்க மாட்டோம்: திட்டவட்டமாக அறிவித்த பிரிட்டன், பிரான்ஸ்..!

ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்க மாட்டோம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, ஈரான் மீது தாக்குதல் நடத்த மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் ஆகிய இருவரும், ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் இணைய போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடமும் இரு நாடுகளும் கேட்டுக்கொண்டுள்ளன.

இந்த நிலையில், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதை அடுத்து, அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன. இஸ்ரேல் மற்றும் ஈரான் பிரச்சனைகளை பேசி, சுமுகமாக தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது."


Edited by Mahendran