1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (16:09 IST)

ஓடும் காரில் இருந்து கழன்ற டயர் என்ன செய்தது தெரியுமா? வைரல் வீடியோ

துருக்கியில் ஓடும் காரில் இருந்து திடீரென கழன்ட டயர் அதி வேகத்தில் உருண்டு வந்து மருந்து கடைக்குள் புகுந்தது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


 

 
துருக்கி நாட்டின் அடானா மாகாணத்தில் கார் ஒன்று சாலையில் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் பின்பக்க டயர் கழன்று வேகமாக உருண்டு அருகில் இருந்த மருந்து கடைக்குள் புகுந்தது.
 
இதில் மருந்து கடைக்குள் அமர்ந்து பேசி கொண்டிருந்த 2 பேர் லேசாக காயமடைந்தனர். திடீரென டயர் உருண்டு வந்து மேலே விழுந்ததால், அவர்கள் சற்று பீதி அடைந்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோ காட்சி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

 

நன்றி: Raw Leaks News