கத்தார் நாட்டில் தூக்கு கயிற்றின் கீழ் 2 தமிழர்கள்: தமிழக அரசு காப்பாற்ற கோரிக்கை
கத்தார் நாட்டில் மூதாட்டி ஒருவரின் கொலை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு மரண தண்டைனையும், ஒருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்தது அந்நாட்டு நீதிமன்றம்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட செல்லதுரை மற்றும் சுப்பிரமணியம் ஆகியோருக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும். இந்நிலையில் இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூன்று பேரின் விடுதலைக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என செல்லதுரையின் மனைவி ராஜம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக கத்தாருக்கு சென்று அந்த தமிழர்களை சந்தித்த வழக்கறிஞர் சுரேஷ்குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, வரும் 30-ஆம் தேதி தண்டனை நிறைவேற்ற தேதி குறிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு முன்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.