வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 அக்டோபர் 2022 (09:08 IST)

இனி ட்விட்டர் சேவைகளை பெற கட்டணம்? – பயனாளர்கள் அதிர்ச்சி!

elan twitter
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் ட்விட்டரில் அளிக்கப்படும் சில சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் முக்கியமான இடத்தில் ட்விட்டர் உள்ளது. ட்விட்டரில் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்களும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இவர்களை பின்தொடர்பவர்களும் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரபலமானவர்களின் கணக்குகளுக்கு ட்விட்டர் ப்ளூ டிக் வழங்கி வருகிறது. தற்போது ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் இந்த ப்ளூ டிக் வசதிகளை பெற மாதம் ரூ.1800 செலுத்த வேண்டும் என அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதுபோல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை ப்ரொமோட் செய்தல் உள்ளிட்ட வணிக ரீதியான பயன்பாடுகளுக்கும் ட்விட்டரில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்தி அதற்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Edited By Prasanth.K