1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Turkey man self search with police

என்னை காணவில்லையே நேற்றோடு.. தேடி பார்க்கிறேன் காட்டோடு! – துருக்கியில் நடந்த அட்ராசிட்டி!

World
துருக்கியில் காணாமல் போன ஒரு நபரை போலீஸார் தேட, சம்பந்தப்பட்ட நபருமே கூட சேர்ந்து தேடிய சம்பவம் வைரலாகியுள்ளது.

துருக்கியில் 50 வயது நபர் ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதற்காக காட்டிற்குள் சென்றுள்ளார். நண்பர்கள் அனைவரும் மது அருந்து கொண்டாட்டமாக இருந்தபோது 50 வயது நபரை மட்டும் காணவில்லை. இதுகுறித்து அவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்கு வந்த போலீஸார், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சம்பந்தபட்ட நபரை தேடிக் கொண்டிருக்க அவர்களோடு சேர்ந்து காணாமல் போனவரும் யாரையோ தேடிக் கொண்டிருந்திருக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரே “யாரை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?” என போலீஸாரிடம் கேட்க அப்போதுதான் இந்த நபர் தங்களோடு சேர்ந்து தேடிக் கொண்டிருப்பதை கவனித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவை போல செயல்படுகிறார்! – செல்லூர் ராஜூ புகழாரம்!