வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (08:19 IST)

ஒழுங்கா மருந்தை கொடுத்துடுங்க! – இந்தியாவுக்கு ட்ரம்ப் மிரட்டல்

கொரோனா சிகிச்சைக்கான மருந்தை இந்தியா தராவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மேல் அதிகரித்துள்ளது. நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹைராக்ஸிக்ளோரொகுயின் என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

உலகளவில் அதிகளவில் ஹைட்ராக்ஸிக்ளொரோகுயின் தயாரிக்கும் நாடாக இந்தியா இருப்பதால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்த மருந்தை அமெரிக்காவுக்கு தர வேண்டும் என கேட்டிருந்தார். ஆனால் இந்தியாவின் சூழலை கருத்தில் கொண்டு மலேரியா மருந்துகள் உள்ளிட்ட சிலவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா மருந்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து எச்சரித்துள்ள ட்ரம்ப் ”இந்தியா எங்களது நட்பு நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஹைட்ரோக்ளோரோகுயின் மருந்தை அமெரிக்கா கேட்டும் அதற்கு இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியா மருந்து கொடுக்காதபட்சத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என கூறியுள்ளார்.