1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 12 மே 2018 (08:39 IST)

வலுக்கட்டாயமாக கற்பழிப்பு - கணவனை கொலை செய்த மனைவி

சூடானில் மனைவியை கணவன் வலுக்கட்டாயமாக கற்பழித்ததால், ஆத்திரமடைந்த மனைவி கணவனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
சூடான் நாட்டை சேர்ந்த நவுரா உசேன் என்ற பெண்ணிற்கு அவரது பெற்றோர், வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தனர். அப்பெண்ணிற்கு அவரது கணவருடன் சேர்ந்து வாழ்வதில் உடன்பாடு இல்லாததால், கணவனைப் பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நவுராவை சமாதானம் செய்த அவரது பெற்றோர், அவரை அவரது கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நவுரா வீட்டிற்கு சென்றதும், அவரது கணவர் நவுராவை, பலவந்தமாக கற்பழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவுரா கணவனை கத்தியால குத்தி கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நவுராவின் கணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நவுராவை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.