திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (16:01 IST)

தேர்தலில் என்ன தோற்கடிக்க சீனா சதி செய்கிறது! – தொடர் மோதலில் ட்ரம்ப்!

கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளிட்ட பல விஷயங்களில் சீனாவை குற்றம் சுமத்தி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது அதிபர் தேர்தலிலும் சீனாவின் சதி திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியான நடவடிக்கைகளில் சீனாவுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு நீண்ட காலமாக வாக்குவாதம் இருந்தது. மூன்றாம் உலக நாடு என்ற பெயரில் பொருளாதார சலுகைகளை அபிரிமிதமாக சீனா அனுபவித்து வருவதாக ட்ரம்ப் சில இடங்களில் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதற்கு சீனா முன்கூட்டியே எச்சரிக்காததே காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.

இவ்வாறாக தொடர்ந்து சீனாவை குற்றம் சாட்டி வரும் அதிபர் ட்ரம்ப் தற்போது சீனா மீது புதிய குற்றசாட்டு ஒன்றையும் வைத்துள்ளார். ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேசியுள்ள அதிபர் ட்ரம்ப் இந்த ஆண்டில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை தோற்கடிக்க சீனா சதி செய்து வருவதாக கூறியுள்ளார்.

தன்னை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ ஃபிடனை வெற்றிபெற செய்தால் சீனாவின் வர்த்தகத்திற்கு ஆதரவான சூழல் உருவாகும் சீனா திட்டமிடுகிறது என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் மருத்துவம் மற்றும் அரசியல் சார்ந்து பேசும் சம்பவங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அமெரிக்காவில் அவருக்கு ஆதரவு குறைவதாக பேசிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் ட்ரம்ப் இப்படி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.