ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (10:20 IST)

இங்கேயும் மோதிக் கொள்ளும் கிரேட்டா தன்பெர்க் – ட்ரம்ப்! – உலக அமைதிக்கான பரிந்துரை!

உலக அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்டவற்றிற்கு நோபல் பரிசு வழங்கப்படும் நிலையில் உலக அமைதிக்காக செயல்படுபவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021ம் ஆண்டிற்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையில் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் பெயரும், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சுற்றுசூழல் தன்னார்வல சிறுமியான க்ரேட்டா தன்பெர்க் பெயரும் இடம்பெற்றுள்ளன. பருவநிலை மாற்றம் குறித்து உலகம் முழுவதும் தொடர்ந்து பரப்புரை செய்து வரும் க்ரேட்டா தன்பெர்கை, ட்ரம்ப் அதிபராக இருந்த காலத்தில் கிண்டல் செய்ததும், பதிலுக்கு அமெரிக்க தேர்தலில் ட்ரம்புக்கு க்ரேட்டா எதிர்ப்பு தெரிவித்ததும் வைரலானது. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிந்துரையில் இருவர் பெயரும் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.