செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:44 IST)

மோசமாகும் கொரோனா பரவல்... இந்தியாவுக்கு தடா போட்ட உலக நாடுகள்!

உலக நாடுகள் இந்திய பயணத்திற்கு காலவரையற்று தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து 3 லட்சத்திற்கு அதிகமாக தினசரி பாதிப்பு இருந்து வருகிறது. 
 
எனவே, உலக நாடுகள் இந்திய பயணத்திற்கு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. முன்னதாக இங்கிலாந்து நாடு கொரோனா அச்சத்தில் இந்தியாவை சிவப்பு பட்டியலில் சேர்த்து போக்குவரத்துக்கு தடை விதித்தது. இங்கிலாந்து நாட்டை தொடர்ந்து ஹாங்காங், அதனை தொடர்ந்து வளைகுடா நாடுகளான ஓமன் மற்றும் சவுதி அரேபியாவும் காலவரையற்று இந்தியா மீது பயண தடை விதித்துள்ளது.