புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2019 (18:19 IST)

ஸ்கூட்டர் மீது மோதிய அதிவேக ரயில்.. நெஞ்சை பதறவைத்த வீடியோ

ஸ்கூட்டரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற நபரை, அதிவேகமாக வந்த ரயில் மோதி தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் மான்ஷான் நகரில் உள்ள டங்க்டூ என்ற ஊரில் காலை சரக்கு ரயில் ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. இதனை கவனிக்காமல் ஸ்கூட்டரில் வந்த நபர் ஒருவர், ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அதிவேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இதில் அவர் ஸ்கூட்டரோடு தூக்கி வீசப்பட்டார். இதனால் அவரின் ஸ்கூட்டர் சேதமடைந்தது மட்டுமல்லாமல் அவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. அவரை ரயில்வே அதிகாரி ஒருவர், மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். மேலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியதாகவும் , தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஸ்கூட்டரில் வந்த நபரை ரயில் மோதிய சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.