1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (11:33 IST)

இதான் உண்மையான லைஃப் டைம் செட்டில்மெண்ட்! – இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்ட லாட்டரி!

Dubai lottery
ஒவ்வொரு மாதமும் ரூ.5 லட்சம் பரிசு கிடைக்கும் லாட்டரி ஒன்றில் இந்தியர் ஒருவர் வெற்றி பெற்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.



உலகம் முழுவதும் மக்களுக்கு லாட்டரி சீட்டு மீது அலாதி மோகம் இருந்து வருகிறது. பல நாடுகளிலும் இதுபோன்ற லாட்டரிகள் விற்பனையாகி வரும் நிலையில் அதில் லட்சங்களிலும், கோடிகளிலும் பலருக்கு அதிர்ஷ்ட லாட்டரி அடித்து ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள்.

ஆனால் துபாயில் வேலை பார்த்து வந்த இந்தியர் ஒருவருக்கு இதை விட சிறப்பான ஒரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இந்தியாவின் உத்தர பிரதேசத்தை சேர்ந்த முகமது ஆதில் கான் என்பவர் துபாயில் லாட்டரி ஒன்று வாங்கியுள்ளார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அவருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5.5 லட்சம் வழங்கப்பட உள்ளது.

அதுவும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு அல்ல. மொத்தமாக 25 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.5.5 லட்சம் அவருக்கு வழங்கப்பட உள்ளது. உண்மையாகவே இது ஒரு லைஃப் டைம் செட்டில்மெண்ட் தான் என வியந்து போயிருக்கின்றனர் சமூகவலைதள வாசிகள்.

Edit by Prasanth.K