சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்குப் பின் பெண்ணுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.. அதிர்ச்சி தகவல்..!
சிங்கப்பூரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் சரிதேவி ஜமாலி என்பவர் 31 கிராம் ஹெராயின் தனது வீட்டில் வைத்து இருப்பதாக கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கிய நிலையில் அந்த தண்டனை இன்று நிறைவேற்றப்பட்டது
சிங்கப்பூரில் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்துப்பவர்களுக்கும் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் காலத்துபவர்களுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. தூக்கு தண்டனையை ரத்து செய்து மனிதர்கள் திரும்பி வாழ வாய்ப்பு வழங்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த போதும் போதைப்பொருள் விஷயத்தில் சிங்கப்பூர் கடும் நடவடிக்கை எடுத்து வருவதால் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran