பிரபல ஓவியரின் ஓவியம் திருட்டு.... திருடர்கள் கைவரிசை !
நெதர்லாந்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியர் வின்செண்ட் வான்கோவின் பிரசித்தி பெற்ற ஒவியத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெதர்லாந்து நாட்டில் வாழ்ந்த ஓவியர் வின்செண்ட் வான்கோ. இவர் அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்றவராக இருந்தார்.
இந்த நிலையில், அவர் கடந்த 1884 ஆம் ஆண்டு வரைந்த வசந்தகாலத் தோட்டம் என்ற ஓவியம் லாரன் நகரில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கொரோனாவை தடுக்கும் பணிக்காக மார்ச் 12 ஆம் தேதியில் இருந்து அருங்காட்சியகம் மூடப்பட்டது. அங்கு கண்ணாடியை உடைந்து வான்கோவின் வசந்த கால ஓவியத்தை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். போலீஸார் இதுகுறித்து குற்றவாளிகளை விசாரணை நடத்திவருகின்றனர்.