திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 11 நவம்பர் 2019 (15:50 IST)

’’சவக்குழியில்’’ படுத்திருக்கும் மாணவர்கள்...ஏன் தெரியுமா ?

இந்த எந்திர உலகில் எந்த ஒரு நாட்டு மக்களுமே மன அழுத்தம் இல்லாமல் இருக்க முடியாது. அப்படி மன அழுத்தம் இருப்பவர்கள் நாளடையில் பல்வேறு நோய்களுக்கும், மன விரக்திக்கும் ஆளாக நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் நிஜ்மேகன் நகரில் பவுடு பல்கலைக்கழகம் உள்ளது.  இங்கு பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் மன  அழுத்தத்தைப் போக்கும் புதுவிதமான பயிற்சி அளிக்கப்படுகிறது.
 
அது என்ன பயிற்சி என்றால், மாணவர்களை சுமார் அரை மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை சவக்குழியில் படுக்க வைக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
 
சவக்குழிக்குள் போகும்போது, கையில் பாய், தலையணை, செல்போன், உள்ளிட்ட எந்த பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதனால் மாணவர்கள், தங்களின் தேர்வு கால மன அழுத்தம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
 
எப்படியும் நாம் அதற்குள்தானே செல்லப் போகிறோம்.