1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 மார்ச் 2017 (17:51 IST)

நகை, பணத்தை விட்டுவிட்டு இதை திருடும் காமெடி திருடன்!!

ஜப்பானை சேர்ந்த திருடன் ஒருவன் ஐஸ்கிரீம், சாக்லெட்களை வீடு புகுந்து திருடுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


 
 
வீடுகளில் நுழையும் கொள்ளையர்கள் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த நகைகள் மற்றும் பொருட்களை திருடிச்செல்வார்கள். 
 
ஆனால் ஜப்பானை சேர்ந்த யாசுகிரோ வகாசிமா என்ற கொள்ளையன் வித்தியாசமானவன். குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கு ஐஸ்கிரீம், சாக்லெட் மற்றும் இனிப்பு பொருட்களை மட்டுமே திருடுவான்.
 
சமீபத்தில் போலீசார் அவனை கைது செய்தனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இது போன்று 40-க்கும் மேற்பட்ட கொள்ளையில் ஈடுபட்டதாக அவன் கூறியுள்ளான்.