அமைதியான வாழ்க்கைக்காக பெண் செய்த காரியம்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் 50 களில் இருந்ததைப் போன்று அமைதியான வாழ்க்கையை விரும்பி தன் வேலையை விட்டுள்ளார்.
அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த அலெக்சியா டெலாரோஸ்(29) என்ற பெண் மாதம் தோறும் லட்சணக்கில் சம்பளம் பெறும் வேலையில் இருந்தார்.
ஆனால், இவருக்கு இத்தனை வருமானம் தரக்கூடிய தொழிலில் இருந்து கொண்டு தன் வீட்டில் கணவர், 2 குழந்தைகளுடன் அமைதியாக இருக்க முடியவில்லை.
எனவே, அலெக்சியா தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, 50 களில் இருந்ததைப் போன்று வீட்டையும் குழந்தையும் கவனித்துக் கொள்வதாக முடிவெடுத்துள்ளார்.
இதனை Tradewives என்று அழைக்கிறார். மேற்கத்திய நாடுகளில் இத்தகைய பழக்கம் அதிகரித்து வருகிறது.