1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 ஜூலை 2019 (14:45 IST)

’ஓடிப் போன மனைவி ’குறித்து கவிதைகள் எழுதும் துபாய் மன்னர் !

சமீபத்தில் துபாய் மன்னர், முகமது பின் ரஷித் அல் மக்தூம் - ன் மனைவி, கோடிக்கணக்கான பணத்துடன் தப்பி வெளிநாட்டுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகின.அதனால் விரக்தி அடைந்த மன்னர் தற்பொழுது சோகத்தில் கவிதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகின்றது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எனப்படும் துபாயில் மன்னர் ஆட்சு நடைபெறுகிறது. இந்த நாட்டை ஆட்சி செய்பவர் மன்னர் ஷேக் ரஷித் மக்தூம் (69)இவரது மனைவி சமி ஹயா பிண்ட் அல் ஹீசைன். இந்த தம்பதிகளுகு சையத் (7), ஜலீலா (11) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில் மன்னருக்கும் , மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகமானதாகத் தெரிகிறது. இதனால் மன்னரிடம் இருந்து ஹயா விவாகரத்து கேட்டதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து , கடந்த மே மாதத்தில் தனது குழந்தைகளுடன் ஹயா தலைமறைவானார். தற்போது அவர் ஜெர்மனிக்கு சென்றதாக கூறப்பட்டது. ஆனால் அங்கு தங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தற்போது அவர் லண்டனின் தங்கி இருப்பதாகவும் மீடியாக்களில் செய்திகள் வெளியானது.
 
தனது மனைவி மற்றும் ஹயா சொல்லாமல் கொள்ளாமல் வெளிநாட்டுக்குக் கிளம்பிச் சென்றதால் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் மக்தூம் சோகத்தில்  ஆழ்ந்துள்ளாராம். அவர் அண்மையில் எழுதிய கவிதைக்கு ’நீ வாழ்ந்தாய்.. இறந்தாய்’ என்ற தலைப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.