வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 22 ஆகஸ்ட் 2018 (19:58 IST)

வெளிநாட்டு நிதியை ஏற்கலாம்: பினராயி விஜயன் மத்திய அரசுக்கு பதில்!

கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகள் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டதால், வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டும் மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். 
இந்நிலையில், கேரளா தனது இயல்பு நிலைக்கு திரும்ப பல தரப்பு மக்கள் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். மக்கள் மட்டுமின்று நடிகர்கள், அரசியல் தலைவர்கள், மாநில அரசுகள் சார்ப்பில் நிதியும், நிவாரண பொருட்களும் வழங்ப்பட்டு வருகிறது. மத்திய அரசும் கேரள மழையை அதிதீவிர பேரிடராக அறிவித்து நிதி வழங்கியுள்ளது. 
 
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு ஐக்கிய அமீரகம் ரூ.700 கோடி நிதியுதவி வழங்குவதா அறிவித்தது. ஆனால், இதனை மத்திய அரசு ஏற்க மறுத்தது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நமது நாடே மேற்கொளவது என்பதையெ கொள்கையாக பின்பற்றி வருவதால், ஐக்கிய அரபு அமீரகம் வழங்கும் நிதியுதவியை பெற மாட்டோம் என மத்திய அரசு சார்பில் காரணம் தெரிவிக்கப்பட்டது. 
 
இதற்கு தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார். அதில் அவர், மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு அதனை ஏற்கலாம்.  வெளிநாட்டு நிதியை ஏற்கலாம் என 2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கையில் உள்ளது எனவும், வெளிநாட்டு நிதி விவகாரத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.