வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 மார்ச் 2023 (23:48 IST)

இம்ரான்கானை கைது செய்ய கைது வாரண்டுடன் சென்ற போலீஸார்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வீட்டிற்கு  கைது வாரண்டுடன் போலீஸார் சென்றனர்.

பாகிஸ்தானின் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது தலைமையிலான ஆளுங்கட்சிக்கு எதிரான முன்னாள் பிரதமரும், கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.

கடந்தாண்டு அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், சிகிச்சைக்குப் பின் மீண்டும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.
இவர் மீது தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சி தரப்பு, அரசு உள்ளிட்ட பலரும்  வழக்குத் தொடுத்துள்ளனர்.


மேலும், இம்ரான்கான் பிரதமராகப் பதவியிலிருந்த போது, அவர் பெற்ற பரிசுகளை அதிக விலைக்கு  விற்றதாக அவர் மீது  குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் அவரை கைது செய்ய வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கைது உத்தரவுடன் அவர் இல்லத்திற்குப் போலீஸார் சென்றனர். ஆனால், இம்ரான் கட்சியின் வீட்டின் முன் கூடியதால், போலீஸார் திரும்பிச் சென்றனர்.  நாளை இம்ரான் கான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை இம்ரான் மதிப்பதாகவும் அவரது வழக்கறிஞர்    நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.