வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 6 டிசம்பர் 2023 (22:20 IST)

மேடையில் கண்ணீர் விட்டு அழுத வட கொரிய அதிபர்!

North Korea
வடகொரிய  நாட்டில் அதிபர் ஜிம்ஜாங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது சர்வாதிகாரத்துடன் ஆட்சி நடந்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இவரது புதிய புதிய உத்தரவுகள் மற்றும் நடவடிக்கைகள், சட்டவிதிகள் எல்லாம் வெளியாகி அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த  நிலையில் சிறிய நாடாக இருக்கும் வடகொரியாவில் மக்கள் தொகை 2.1 கோடி மட்டும்தான் உள்ளது.

இந்த நிலையில்  பெண்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற வடகொரிய அதிபர் கிம்ஜாங்,’’ நாட்டில் உள்ள பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க  வேண்டும் எனக் கூறி மேடையில்  கண்ணீர் விட்டு அழுதார். அங்கு, குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வரும் நிலையில், அவர் அதனை தெரிவித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது: பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். இதுவே நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பதுடன் குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். முறையாக கல்வி வழங்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.