செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 23 மே 2022 (18:47 IST)

12 நாடுகளைச் சேர்ந்த 92 பேருக்கு குரங்கு வைரஸ்...

monkey virus
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளைத் திண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.
 

இந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்குச் சென்று லண்டன் திருப்பிய நிலையில் அவருக்குக் குரங்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த 7 ஆம் தேதி அறிவித்ததனர்.

இந்த நோய் தொற்று எளிதில் ஏற்படாது எனிலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகினால் இந்த நோய்  ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல், தலைவலி, முகுகுவலி, குளிர், சோர்வு, ஆகிய அறிகுறிகள் இருக்கும், மேலும், சுவாசப்பாதை, கண், மூக்கு, பிளவு ஏற்பட்ட தோல் ஆகியவற்றின் மூலம் இந்த நோய் ஏற்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில்.   அமெரிக்கா, கனடா, ஜெர்மனி,ஸ்பெயின், இந்தாலி உள்ளீட்ட 12 நாடுகளைச் சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1958 ஆம் ஆண்டு தான் குரங்குகளுக்கு முதன் முதலாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.