ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (21:47 IST)

கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேர் ஒமிக்ரான் தொற்று

கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக  சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு பரவி வரும் ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிது.

ஏற்கனவே கொரொனா 2 வது அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் படிப்படியாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் இன்று மேலும் 6 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 14 பேர் இம்மாநிலத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 107  பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.