செவ்வாய், 6 ஜூன் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated: புதன், 29 மார்ச் 2023 (21:06 IST)

துப்பாக்கிக் குண்டுகள் மாயம்! அதிபரின் உத்தரவால் அதிகாரிகள் நடுக்கம்!

ஆசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு வடகொரியா. இந்த நாட்டில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகாரன் ஆட்சி நடந்து வருகிறது.

ஏற்கனவே அங்கு ஐ.நா.,வின் எச்சரிக்கையை மீறி தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகள் நடந்து வருவதலால் அந்த நாட்டின் மீது பொருளாதாரத்தடை உள்ளது. இதையும் மீதி அந்த நாடு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், வடகொரியாவின், சீன நாட்டில் எல்லையில் அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஹைசன் நகரில் வடகொரிய ராணுவ 7 வது படைப்பிரிவு உள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து அப்படையினர் திரும்ப பெற்ற நிலையில், அங்கிருந்த ராணுவ வீர்ர்களிடமிருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகியுள்ளது.

இவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவே இதுபற்றி  உயரதிகாரிகள் அதிபர் கிம்மின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.

இதுதொடர்பாக அவர், 'துண்டுப்பாக்கிக் குண்டுகள் கிடைக்கும் வரை அந்த நகரில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறித்து, அதிகாரிகளின் வீடுகளிலும், தொடர்ந்து சோதனை செய்ய' உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது; உயரதிகாரிகளும் நடுக்கத்தில் உள்ளனர்.