செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 மார்ச் 2023 (00:09 IST)

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நடிகைக்கு உயரிய விருது

Mindy Kaling
அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித  நேயத்தை வளர்க்கும் நபர்களுக்கு விருது அளிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு, இவ்விருதை இந்திய வம்சாவளி நடிகை மிண்டி கங்கிலி  பெற்றுள்ளார்.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, ஒவ்வொரு ஆண்டும் மனித நேயத்தை ஊக்குவிக்கவும்,   நாட்டின் மீதான பற்றை ஆழப்படுத்தவும், வரலாறு, இலக்கியம், மொழிகள், தத்துவம் ஆகியவற்றில், நாட்டு மக்களின் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் வளர்த்த  நபர்கல், பிரபலங்கள், மற்றும் குழுக்கும் தேசிய மனித நேய விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான தேசிய மனித நேய விருது விழா வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

இந்த விழாவின்போது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகையும், எழுத்தாளருமான மிண்டி கங்குகிலிக்கு( 43) இவ்விருதை அதிபர் பைடன் வழங்கி கவுரவித்தார்.

அவருக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது