1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (20:31 IST)

அமெரிக்கா H5 வைரஸ் தாக்கிய முதல் நபருக்கு தீவிர சிகிச்சை!

H5 virus
அமெரிக்காவில் முதல் முறையாக H5 என்ற வைரஸ் தாக்கியவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இதுகுறித்து அமெரிக்காவின் நோய் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் H5 வைரஸ் பாதிக்கப்பட்ட நபருக்கு கூடுதல் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நபர் குணமடையும் வரை அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அவரை தனிமைப்படுத்தி அந்த வைரஸ்க்கு எதிர்ப்பு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு நபருக்கு H5 வைரஸ் பரவியிருக்கும் தகவல் அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது