திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 12 பிப்ரவரி 2020 (21:46 IST)

திருமண மோதிரத்தை விழுங்கிய நாய்... வைரல் போட்டோ

திருமண மோதிரத்தை விழுங்கிய நாய். வைரல் வீடியோ

தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ஒரு நாய் தந்து உரிமையாளரின் மோதிரத்தை விழுங்கியது. இதுகுறித்து மருத்துவர்கள் நாயின் உடலில் எக்ஸ்ரே எடுத்த படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 
தென்னாப்பிரிக்கா நாட்டில் உள்ள பிரிட்டோரியா என்ற பகுதியில் ஒரு பெண் பெப்பர் என்ற நாயை செல்லமாக வளர்த்து வந்தார். 
 
சம்பவத்தன்று, அவர் குளிப்பதற்காகச் சென்றபோது, தனது மோதிரத்தை மேஜை மீது வைத்தார்.
 
திரும்பி வந்து பார்த்தபோது மோதிரத்தைக் காணவில்லை. ஒருவேளை நாய் விழுங்கியிருக்கலாம் என கால்நடை மருத்துவமனைக்கு அதைக் அழைத்துச் சென்றார். 

நாயை பரிசோதித்த மருத்துவர்கள் நாயின் வயிற்றில் மோதிரம் உள்ளதை கண்டுபிடித்தனர்.
அதன்பின் அதற்கு மருத்து கொடுத்து வாய் வழியாக மோதிரத்தை வெளியேன் எடுத்தனர்.
 
மருத்துவர்கள் நாயின் வயிற்றில் இருந்த மோதிரத்தை எக்ஸ்ரே செய்த பதிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது அது வைரல் ஆகி வருகிறது.