நினைவுச்சின்னம் முன்பு நடனமாடிய ஜோடிக்கு சிறைத்தண்டனை!
ஈரான் தலைநகர் தெஹ்ராவில் உள்ள நினைவுச் சின்னம் ஆசாதி கோபுரத்தின் முன்பு நடனம் ஆடிய ஜோடிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய நாடான ஈரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முக்கிய தலைவராக அலி கம்னீ இருக்கிறார்.
ஏற்கனவே இந்த நாட்டில் பெண்களுக்கு உள்ள கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், பொது இடங்களில் நடனமானன அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் தலை நகர் தெஹ்ரானில் உள்ள பிரபல நினைவுச் சின்னமான ஆசாதி கோபுரம் முன்பு ஒரு ஆணும், பெண்ணும் நடனம் ஆடி,இந்த வீடியோவை சமூக வலைதலைதளங்களில் பதிவிட்டனர்.
இது வைரலான நிலையில், இதுகுறித்து போலீஸார் விசாரித்தனர். அதில், பெண்ணின் பெயர் அஸ்தியாஜ் என்றும், அவரது வருங்கால கணவன் அமீர் முகமது என உறுதியானது.
இவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இவர்கள் இருவருக்கும் தலா 10 ஆன்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.