ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (15:14 IST)

கோவிலுக்குள் செல்ல அமலாபாலுக்கு அனுமதி மறுப்பு

கேரளாவில் உள்ள திருவைராணிக்குளம் கோவிலுக்குள் நடிகை அமலாபாலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை அமலா பால். இவர், தலைவா, தெய்வத்திருமகள், ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் கோவிலுக்கு இன்று  நடிகை அமலா வந்துள்ளார்.

ஆனால், அவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை கோவிலுக்குள்  நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, வெளியில் இருந்தபடியே அவர் சமிகும்பிட வற்புறுத்தப்பட்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் இதுகுறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.