வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 9 செப்டம்பர் 2020 (20:40 IST)

உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரரின் சொத்துகள் தீடீர் சரிவு...இத்தனை லட்சனை கோடியா?

உலகில் எலக்ட்ரானிக் ரக வாகனங்கள் மற்றும் விண்வெளித் திட்டப் பயணம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவரும் எலான் மஸ்கிம்ன் டெல்ஸா நிறுவனத்தின் பங்குகள் சமீபத்தில் உயர்ந்ததால் உலகப் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க்கை பின்னுக்குத்தள்ளிவிட்டு, எலான் மஸ்க் மூன்றாவது இடம் பிடித்தார்.

எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 8 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபா ஆக இருந்த நிலையில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்தார.

இந்நிலையில், எலான் மஸ்கின் சொத்து மதிப்பு வெறும் 6 மணிநேரத்தில் 1 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

புளூமெர்க பில்லியனர்ஸின் குறியீட்டின் தகவல் படி அவர் உலகில் 6 அவது கோடீஸ்வரராகப் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இப்போது 6 லட்சத்துக்கு 8 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது எலான் மஸ்கின் சொத்து மதிப்பு.