டைனோசரின் வாய்க்குள் விழும் பிரபல பாடகர்... வைரல் போட்டோ !
சிறு வயது முதல் டிரம்ஸ் வாசிப்பது, இசைக்கருவிகள் மீட்டுவது, பாடுவது என தன் திறமைகளை வீடியோ எடுத்து யூடியூபில் அப்லோப் செய்து கொண்டிருந்த ஜஸ்டின் பைபர் சில வருடங்களுக்கு முன் நெட்டிசன்களால் கண்டுகொள்ளப்பட்டார். அதன்பின் அவரது பாடல்களுக்கும், இசை நிகழ்ச்சிகளும் இசை விரும்பிகளுக்கு மத்தியில் பிரபலமாகி வருகிறது.
தற்போது, 25 வயதாகும் ஜஸ்ட்டின் பைபருக்கு (justin bieber ) உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது இசைப் பாடல்கள், ஆல்பங்கள் எல்லாம் பல கோடி பார்வையாளர்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், ஜஸ்டின் பைபர் டைனோசர் வாயில் விழுவது போன்று சில புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.
இதில், சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுவது போன்றும், கூடைப் பந்து கூடையில் இருந்து கீழே விழுவது போன்றும், மிக்கிமசுஸ்களுடன் நிற்பது போன்றும் போட்டோசாப் செய்யப்பட்ட இந்த புகைப்படங்களை ஜஸ்டின் பைபர் ரசிகர்கள் வெகுவாக விரும்பி ரசித்து பரப்பி வருகின்றனர்.