வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (14:11 IST)

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன்பு துணை ராணுவம் குவிப்பு: கைது நடவடிக்கையா?

senthil balaji
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன் திடீரென துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரை கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் சற்று முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். மேலும் அவருடைய உதவியாளர் விஜயகுமாரை தனியாக அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சென்னை பசுமை சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டின் முன் திடீர் என துணை இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 பேர்கள் கொண்ட துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே செந்தில் பாலாஜி இன்று கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கும் நிலையில் கைது நடவடிக்கை இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran