1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : சனி, 8 ஏப்ரல் 2017 (07:39 IST)

சூப்பர் மார்க்கெட்டில் வித்தியாசமான தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்: 3 பேர் பலி

சிரியாவில் ரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் தாக்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே உலக நாடுகள் இன்னும் மீண்டு வராத நிலையில் நேற்று நள்ளிரவில் சுவீடன் நாட்டில் தீவிரவாதிகளின் அட்டகாச தாக்குதல் காரணமாக சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானதாகவும், இன்னும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திடுக்கிடும் செய்தி வெளிவந்துள்ளது.



 



சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் மீது மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டுகளுடன் கூடிய டிரக்கை மிக வேகமாக ஓட்டிவந்து மோதியுள்ளார். இதனால் டிரக்கில் இருந்த குண்டுகள் பயங்கரமாக வெடித்ததில்  3 பேர் உயிரிழந்தனர்

குண்டுவெடித்த சத்தம் கேட்டு சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள் முண்டியடித்து ஓடியதால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே ஒருசிலர் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதல் சுவீடனில் நிகழ்ந்த முதல் பெரிய தாக்குதலாக கருதப்படுகிறாது. இந்த தாக்குதலை  வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் அந்நாட்டின் பிரதமர் லோஃப்வன் கூறியுள்ளார்.