செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 12 ஆகஸ்ட் 2017 (08:13 IST)

ஒருபக்கம் மட்டும் வளரும் மார்பகம்: டீன் ஏஜ் இளைஞருக்கு நேர்ந்த அவலம்

சீனாவை சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த ஆறு வருடங்களாக அவருடைய வலது புறத்தில் பெண்களை போல் மார்பகம் வளர்ந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான அந்த இளைஞருக்கு தற்போது அறுவை சிகிச்சை செய்து மார்பகம் அகற்றப்பட்டுள்ளது.



 
 
ஹார்மோன் குறைவு காரணமாக லட்சத்தில் ஒரு ஆணுக்கு மார்பகங்கள் வளர்வது உண்டு. ஆனால் இந்த இளைஞருக்கு வித்தியாசமாக ஒரே ஒரு பக்கம் மட்டும் மார்பகம் வளர்ந்தது.
 
அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் பின்னர் சர்ஜரி செய்து ஒருபக்க மார்பகத்தை அகற்ற முடிவு செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது நார்மலாக இருக்கும் அவரிடம் மருத்துவர்கள் கெமிக்கல் கலந்து ஃபாஸ்ட்புட் உணவுகளை சாப்பிட வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.