1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (11:46 IST)

குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்: ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் கொலை என தகவல்!

shot
குவைத் நாட்டில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் பி பார்ம் படித்து விட்டு குவைத்துக்கு வேலை தேடி சென்றார். வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் மூலம் அவர் குவைத் சென்றதாக தெரிகிறது. இதற்காக அவர் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு ஒட்டகம் மேய்க்க சொல்வதால் அந்த வேலை பிடிக்கவில்லை என்றும் ஊர் திரும்பி விட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தனது மனைவியுடன் தொலைபேசியில் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் திடீரென முத்துக்குமரன் மரணமடைந்து விட்டதாக அவரது மனைவிக்கு செய்தி வந்தது .இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துகுமரைன் மனைவி  இது குறித்து ஐதராபாத் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. அரசு தரப்பில் முயற்சி செய்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை
 
இந்நிலையில் முத்துக்குமரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் அங்கிருந்த ஒருவர் அவரை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென முத்துக்குமரனின் மனைவி வித்யா திருவாரூர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். இந்த மனு மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது