1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 பிப்ரவரி 2022 (13:34 IST)

உக்ரைனில் தமிழ் நாட்டு மாணவர்கள் சிக்கித் தவிப்பு...

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய அதிபர்  புதின் போர்தொடுக்க உத்தரிவிட்டுள்ளதால், உக்ரைன் நாட்டின்   நுழைந்துள்ள  ரஷ்ய ராணுவவீரகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகின்றனர்.#RussiaUkraineConflict #Ukraina

இதில், தங்கள்  நாட்டு ராணுவ வீரர்கள்  நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. மேலும் அந் நாட்டின் முக்கியமான இணையதங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தியுள்ளது.

உலகளப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய போராக இது இருக்கும் எனத் தெரிகிறது. மேலும், உக்ரைன் விமானத்தளங்கள், விமானப் படையை முடக்கியதாக ரஷ்யா தெரிவித்த  நிலையில், உக்ரைன் ராணுவத்தைச் சரணடையும்படி ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இ ந் நிலையில்,   உக்ரைன் தலை நகர் கீவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தமிழ் நாட்டு மாணவர்கள் சிக்கித்தவித்துள்ளனர்.

ஏற்கனவே உக்ரைனில் சைபர் தாக்குதால் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதால் மாணவிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.