1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 ஆகஸ்ட் 2021 (14:31 IST)

தலிபான்கள் பிடியில் 150 இந்தியர்கள்??

காபூல் விமான நிலையத்திலிருந்து தலிபான்கள் 150 இந்தியர்களைக் கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150 பேரை தலிபான்கள் பிடித்து வைத்திருப்பதாகவும், அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியானது. இத்தகவலின் நம்பகத்தன்மை குறித்து அறிந்து கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. 
 
காபூல் விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் குவிந்துள்ள நிலையில், 150க்கும் இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை தலிபான் அமைப்பினர் மறுத்துள்ளனர்.