வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 17 ஜூலை 2021 (17:31 IST)

டேனிஷ் சித்திக்கி கொலைக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை- தாலிபான்கள்!

ஆப்கனில் போர்க்காட்சிகளை படம்பிடிக்க சென்ற இந்தியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக்கி அங்கே பலியானார்.

இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டது. நீண்டநாட்களாக அந்நாட்டின் ராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க  முன்னாள் அதிபர் புஷ் ஆட்சியின்போது, தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானுக்கு உதவும் வகையில் அந்நாட்டின் அமெரிக்க படையினர் குவிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு அமெரிக்க பிரதமராக ஜோ பிடன் பதவியேற்றபோது, இந்தாண்டு செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் அமெரிக்கப்  படைகள் அங்கிருந்து படைகளை வாபஸ் பெருவதாக அறிவிக்கப்பட்டு தற்போது  விலகிவருகின்றனர்.

இந்நிலையில் தாலிபன்களிடம் அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்னும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. ஆப்கான் ராணுவத்திற்கும் - தாலிபன்களுக்கும் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் எல்லைப்புற புற பகுதிகளைப் கைப்பற்றிய பின் தாலிபன்கள் நடத்திய தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ராய்டர்ஸ் செய்தி நிறுவனப்புகைப்படச் செய்தியாளர் தனிஷி சித்திக் மரணமடைந்தார். இது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரைக் கொன்ற தாலிபான்களுக்கு கடுமையான கண்டனங்களும் எழுந்தன.

இந்நிலையில் டேனிஷ் சித்திக்கின் மரணத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று தாலிபான்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளாராம். இருதரப்பும் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதில் யார் சுட்டதில் அவர் இறந்தார் என்பது தெரியவில்லை. போர்க்களத்திற்கு வரும் புகைப்படக் காரர்கள் தங்களிடம் தகவல் தெரிவிக்காமல் இருப்பதும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கக் காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.