1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (13:21 IST)

ஐ.நா கூட்டத்தில் பேச அனுமதி கோரும் தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தில் இருக்கும் தாலிபன்கள், ஐநா சபையில் பேச, ஐநாவிடமே முறையாக அனுமதி கேட்டு உள்ளது. 

 
ஐ.நா.வின் 76-வது கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நியூயார்க் நகரத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் பேச தாலிபன் அனுமதி கோரியுள்ளது. முந்தைய அதிபர் அஷ்ரப் கனியால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.நா. பிரதிநிதியை ஏற்க முடியாது என்றும் புதிய பிரதிநிதியாக முகம்மது சொகையிலை ஏற்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.