ஆப்கானிஸ்தான் புத்தாண்டு: பெண்களுக்கு சலுகை வழங்கும் தாலிபன்!
ஆப்கானிஸ்தானில் அனைத்து வகுப்பு மாணவிகளும் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தாலிபன் அரசு தகவல்.
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய நிலையில் 6 ஆம் வகுப்புக்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதன்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். கல்வி அமைச்சகம் அதன் குடிமக்கள் அனைவரும் கல்வி பெறும் உரிமையை உறுதியளிக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தான் சுகாதார மற்றும் கல்வி அமைச்சகங்களிலும் பெண்கள் பணிபுரிய தாலிபான் ஆட்சியாளர்கள் அனுமதித்துள்ளனர்.
இதேபோல காபூல் சர்வதேச விமான நிலையத்திலும் பெண்கள் பணி புரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு சாரா உதவி நிறுவனங்களிலும் பெண்கள் பணிக்குத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.