ஆபத்தான நிலையில் ஆப்கானிஸ்தான்; இந்தியா செய்த அவசர உதவி!
ஆப்கானிஸ்தானில் மக்களுக்கு மருத்துவ உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய மருந்து பொருட்கள் அனுப்பி உதவியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைந்தது முதலாக பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதனால் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மக்கள் பலர் வறுமை, பட்டினியால் குழந்தைகளை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவும் பரவி வருவதால் அவசர மருத்துவ உதவிகளுக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு உதவ முன்வந்த இந்தியா முன்னதாக 5 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருத்துகளை ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியது. இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தான் மக்களுக்காக 3 டன் மருத்துவ பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளதாக மத்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.