வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 21 டிசம்பர் 2019 (20:49 IST)

தொலைந்து போன செல்ல நாய்... விமானத்தை வாடகைக்கு எடுத்து தேடிய இளம்பெண்...

இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் நாய்களும், பூனைகளும் பெரிய ஆச்சர்யமானவை. இவற்றை வீட்டில்  செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
அதேபோல் அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஜாக்சன் என்பவர்  தன் வீட்டில் செல்லமாக நாயை வளர்த்து வந்தார். இந்நிலையில், திடீரென்று நாய் காணாமல் போனது. 
 
அதனால் வருத்தப்பட்ட அவர், ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து நாயை தேடும் முயற்சியில்  ஈடுபட்டார். அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போகவே, பூனையகைக்  கண்டு பிடித்து தந்தால், ரூ.50 லட்சம் பரிசு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.