சிறுவர்களை அச்சுறுத்தும் தெருநாய்கள் – திண்டிவனத்தில் பதற்றம் !

Last Modified வியாழன், 12 டிசம்பர் 2019 (10:25 IST)
திண்டிவனம் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் தெருநாய்கள் சிறுவர்களை கடிப்பதால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

திண்டிவனம் அருகே உள்ள மயிலம் ராஜிவ்காந்தி நகரைச் சோந்த பாபு மகன் ஜெகதீஷ்(2). இவன் நேற்று விளையாடிக் கொண்டிருந்த போது அந்த பக்கம் சுற்றிக்கொண்டிருந்த தெரு நாய் ஒன்று அவனைக் கடித்துள்ளது. இதில் சிறுவனின் விரலில் காயம் பட்டு ரத்தம் சொட்ட ஆரம்பித்துள்ளது.

சிறுவனை உடனடியாக மயிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரது பெற்றோர் தடுப்பூசி போட்டனர். இது போல குழந்தைகளையும் பெண்களையும் அந்த பகுதியில் இருக்கும் தெருநாய்கள் கடிப்பது வாடிக்கையாகியுள்ளது. கடந்த வாரம் கூட யாஸ்மின் என்ற 8 வயது சிறுமியை  தெருநாய் ஒன்று கடித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தெருநாய்களை அப்புறப்படுத்தவும் அவற்றிற்கு தடுப்பூசி போடவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :