சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம்
சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம்
சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
சிரியாவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதில், சிரியா நாட்டு அதிபர் ஆசாத், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.
சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகள், குர்து இனத்தைச் சேர்ந்த குழுக்கள் என 160 க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதில்,
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 97 போராட்டக் குழுக்களும் அதிபர் ஆசாத் படைகளும் சண்டை நிறுத்தத்தை கடைப்பிடிக்க உறுதியளித்துள்ளன. இதனால் சிரியாவின் பல பகுதிகளில் தற்காலிகமாக போர் ஓய்ந்துள்ளது.