வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 4 டிசம்பர் 2019 (12:00 IST)

”ஆல்பபெட்” நிறுவனத்தின் சிஇஓ ஆகிறார் சுந்தர் பிச்சை..

கூகுளின் தாய் நிறுவனமான “ஆல்பபெட்” நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார் சுந்தர் பிச்சை.

கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை. 2004 ஆம் ஆண்டு கூகுளில் பணியாளராக சேர்ந்த சுந்தர் பிச்சை தனது அசுர உழைப்பால் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார். இதனை தொடர்ந்து தற்போது அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓவாக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான, லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரைன் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக சுந்தர் பிச்சை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது அவர் ஆல்பபெட் குழுமத்தில் இணைவது உற்சாகத்தை அளித்துள்ளது என கூறியுள்ளார்.